Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கலான் படத்தின் இசை அப்டேட் கொடுத்து எதிர்பார்ப்பை எகிறவைத்த ஜி வி பிரகாஷ்!

vinoth
வியாழன், 25 ஏப்ரல் 2024 (10:06 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம், பாரவ்தி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த படத்துக்கு சில ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் இன்னும் படம் ரிலீஸாகவில்லை. ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்களவை தேர்தலால் இப்போது இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கபடாமல் உள்ளது. படம் மே அல்லது ஜூனில் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் “தங்கலான் படத்துக்கான பின்னணி இசை பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தின் பின்னணி இசை தனித்துவமாக இருக்கும். அதை உங்களுக்குக் கொடுக்க நான் ஆர்வமாக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். இந்த படத்தின் மூலமாக தன்னுடைய ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனிடம் இருந்து விலகிய பா ரஞ்சித் ஜி வி பிரகாஷோடு பணியாற்றுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments