குட்னைட் மற்றும் லவ்வர் படங்களின் மூலம் கவனம் பெற்ற மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது ஐந்து படங்களைத் தயாரித்து வருகிறது. அதில் சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி படமும் ஒன்று. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை ரிலீஸாகி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை உருவாக்கினர். அதன் பின்னர் படக்குழுவினர் பத்திரிக்கையாளர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் ஆகியோருக்குப் படத்தைத் திரையிட்டுக் காட்ட அவர்கள் சொன்ன நேர்மறையான விமர்சனங்கள் கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியது.
இதையடுத்து படம் நேற்று ரிலீஸாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் படம் பார்த்துள்ள பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜி வி பிரகாஷ் “டூரிஸ்ட் பேமிலி படம் பார்த்தேன். என் இதயம் நிறைந்துவிட்டது. நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களைக் கச்சிதமாகக் கையாண்டுள்ள படம். மிகவும் அழகானத் திரைப்படம். உளப்பூர்வமான படத்தை அளித்தப் படக்குழுவினருக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.