சிவகார்த்திகேயன் படத்துக்கு முதல்முறையாக இசையமைக்கும் இசையமைப்பாளர்!

Webdunia
புதன், 3 மே 2023 (15:31 IST)
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. இப்போது மாவீரன் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் ஷுட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் கதைக்களம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் காஷ்மீர் பின்னணியில் ராணுவத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலில் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது அவருக்கு பதிலாக ஜி வி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இருவரும் இணையும் முதல் படமாக இந்த திரைப்படம் அமைய உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

23 ஆண்டுகளுக்குப் பிறகு களம் கண்ட அஜித்குமார்: மலேசிய ரேஸிங் அனுபவம் குறித்து நெகிழ்ச்சி

சரத்குமார்தான் சிறந்த நடிகர்! இவர எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? ராஜகுமாரனின் அடுத்த எபிசோடு

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments