Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று முதல் மீண்டும் சென்னையில் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு: பூஜா கலந்து கொள்வாரா?

இன்று முதல் மீண்டும் சென்னையில் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு: பூஜா கலந்து கொள்வாரா?
, செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (08:13 IST)
தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. அதன் பின்னர் சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்ற நிலையில் தற்போது இன்று முதல் சென்னையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது 
 
இன்று தொடங்கும் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பில் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் நாளை முதல் பூஜா ஹெக்டே இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் அவர் கலந்துகொள்ளும் கடைசி படப்பிடிப்பு இதுதான் என்றும் அவரது காட்சிகள் இத்துடன் முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது
 
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதத்திற்குள் முழுமையாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணி அதிகம் இருப்பதால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் திரைப்படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தளபதி விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவரும் இந்த படத்தில் செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நடிகர் சஞ்சீவ்!