Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லாஸ்லியா வேறலெவல் பண்ணிட்டாங்க.... பிரண்ட்ஷிப் படம் எப்படி இருக்கு?

Advertiesment
லாஸ்லியா வேறலெவல் பண்ணிட்டாங்க.... பிரண்ட்ஷிப் படம் எப்படி இருக்கு?
, வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (13:28 IST)
லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ட்ஷிப் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. முதன்முறையாக பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்துள்ள இந்த அப்படம் அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 
 
லாஸ்லியாவின் நடிப்பு மிகவும் அழகா இருப்பதாக எல்லோரும் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். மேலும் கல்லூரி நண்பர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும் என படம் பார்த்தவர்கள் கூறுகின்றனர். ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பு மற்றும் அவரது ரோல் படத்திற்கு மிகவும் ஸ்ட்ராங்காக இருக்கிறது என்றும் கூறுகின்றனர். 
webdunia
FDFSல் படம் பார்க்க வந்த லாஸ்லியாவுடன் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்த படம் பெண்களின் பாதுகாப்பை குறித்து உள்ளது. சதீஷ் மற்றும் அர்ஜுன் நடிப்பு வேற லெவல். அதிலும் கிளைமாக்சில் வரும் அந்த கோர்ட் காட்சி இந்த சமூகத்திற்கு மிகவும் தேவையானது.  ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பொண்ணு லாஸ்லியா இப்போ திரையில் ஹீரோயினாக வந்துள்ளது பாராட்டக்கூடிய விஷயம். இதை பார்த்து அவரின் குடும்பம் பெருமைக்கொள்ளும். ஆக படத்திற்கு நிறைய பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து படம் வெற்றி அடைந்துள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக் பாஸ் சீசம் 5 - கமல் சம்பளம் 60 கோடியா ?