Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

OMG ….சர்கார் படத்திற்கு டிக்கெட் வாங்கினால் பாப் கார்ன் இலவசம்!

Advertiesment
OMG ….சர்கார் படத்திற்கு டிக்கெட் வாங்கினால் பாப் கார்ன் இலவசம்!
, ஞாயிறு, 18 நவம்பர் 2018 (12:38 IST)
விஜய் நடித்து தீபாவளிக்கு ரிலிஸான சர்கார் படத்திற்கு டிக்கெட் வாங்கினால் பாப் கார்ன் இலவசம் என அறிவித்துள்ளது ஸ்ரீ முருகன் தியேட்டர்.

விஜய் நடித்து, திருட்டுக் கதை சர்ச்சைகளைக் கடந்து தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படம் விமர்சன ரீதியாக ஏமாற்றத்தை அளித்தாலும் வசூல் ரீதியாக நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த வசூலுக்குப் படத்தில் இருந்த சில சர்ச்சையானக் காட்சிகளும் அதற்கு ஆளும் கட்சியான அதிமுக வினர் செய்த எதிர்வினையும் ஒரு முக்கியக் காரணமாகும். படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் காட்சிகள் அதிமுக வினரை சாடியுள்ளதாகவும், அரசு ஏழை எளியோர்க்கு அளிக்கும் இலவசப் பொருட்களை ஊழல் திட்டங்களைப் போல சித்தரித்துள்ளதாகவும் புகார் எழுந்தது.

அந்த காட்சிகளைப் பார்த்து வெகுண்டெழுந்த விஜய் ரசிகர்கள் சிலர் தங்கள் வீடுகளில் உள்ள இலவச மிக்ஸி, கிரைண்டர் போன்ற இலவசப் பொருட்களை தீயில் இட்டு கொளுத்திய வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது படம் ரிலிஸாகி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டதால் சர்கார் படத்திற்கு வரும் கூட்டம் குறைந்துள்ளது. அதனால் பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக ஸ்ரீ  முருகன் எனும் தியேட்டரில் சர்கார் டிக்கெட் வாங்கினால் பாப்கார்ன் இலவசம் என அறிவித்துள்ளனர்.

இந்த தகவல் ஒட்டப்பட்டுள்ள சர்கார் படத்தின் போஸ்டர் இப்போது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களுக்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளது.

அந்த தியேட்டர் விஜய் ரசிகர்கள் கண்ணில் படாமல் இருக்க வேண்டும்….
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசை நம்புனா 10 பைசாக்கு கூட பிரயோஜனம் இல்ல: பா.ரஞ்சிச் பரபரப்பு பேச்சு