பாஜகவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், நடிகர் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான மெர்சல் படத்திலிருந்து 4 காட்சிகளை நீக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
மெர்சல் படத்தில் நடிகர் விஜய் ஜி.எஸ்.டி பற்றி பேசிய சில வசனங்கள் பாஜகவினரை கொதிப்படைய செய்துள்ளது. தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போன்றோர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி குறித்த வசனங்களை நீக்க முடிவெடுத்திருப்பதாக படத்தின் தயாரிப்புக் குழு நேற்று அறிவித்தது. மேலும், தணிக்கை குழுவினரை தாக்கி எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், படத்தில் மொத்தம் 4 காட்சிகளை நீக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 4 காட்சிகளை நீக்கக் கோரி தணிக்கை வாரியத்திடம் 23 அல்லது 24 தேதி படகுழு கடிதம் கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.