Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த்ரிஷாவுக்கும், நயன்தாராவுக்கும் பிறந்த பெண் குழந்தை

த்ரிஷாவுக்கும், நயன்தாராவுக்கும் பிறந்த பெண் குழந்தை
, வெள்ளி, 12 மே 2017 (18:01 IST)
த்ரிஷா மற்றும் நயன்தாரா இருவரும் தனித்தனியாக நடித்துவரும் படங்களில், ஒரே பெண் குழந்தை இருவருக்கும் மகளாக  நடித்துள்ளது.

 
அரவிந்த் சாமி, த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சதுரங்க வேட்டை – 2’. இந்தப் படத்தில் இருவரும் எதிரெதிர்  கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆனாலும், இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை இருப்பது போல கதை  அமைக்கப்பட்டுள்ளதாம். இந்தக் குழந்தையாக நடித்திருப்பவர், நடிகர் கொட்டாச்சியின் மகளான மானஸ்வி.
 
நயன்தாரா நடித்துவரும் ‘இமைக்கா நொடிகள்’ படத்திலும், அவருடைய மகளாக நடித்து வருகிறாராம் மானஸ்வி. அம்மா –  மகள் சம்பந்தப்பட்ட மாண்டேஜ் பாடல் ஒன்றும் இருக்கிறதாம். ஒரே நேரத்தில் தமிழின் இருபெரும் நாயகிகளான த்ரிஷா  மற்றும் நயனுக்கு மகளான நடித்திருப்பதன் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறார் மானஸ்வி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேகத்துக்கு ஸ்பீட் பிரேக்கர் போட்ட நடிகை!!