Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்த கீர்த்தி சுரேஷ்

Webdunia
திங்கள், 4 ஜூன் 2018 (11:20 IST)
மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘ரஜினி முருகன்’ படத்தில் இணைந்து நடித்தார் கீர்த்தி சுரேஷ். பொன்ராம் இயக்கிய இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இந்தப்  படத்தைத் தொடர்ந்து, பாக்யராஜ் கண்ணன் இயக்கிய ‘ரெமோ’ படத்திலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தார். இந்நிலையில், மூன்றாவது முறையாகவும் சிவகார்த்திகேயனுடன் இணைந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
பொன்ராம் இயக்கத்தில் தயாராகிவரும் படம் ‘சீம ராஜா’. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, சமந்தா ஹீரோயினாக நடித்துள்ளார். சூரி, நெப்போலியன், சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தை, 24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இந்தப் படத்தில், கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு எந்த விருதும் வேணாம்.. வேற யாருக்காவது குடுங்க! - மாநில விருதை வாங்க மறுத்த கிச்சா சுதீப்!

மிஷ்கின் இளையராஜாவை ஒருமையில் அழைத்ததை இப்படிதான் பார்க்கவேண்டும்- நடிகர் குரு சோமசுந்தரம் பதில்!

வெளிநாடுகளில் ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் விடாமுயற்சி!

ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறிய கங்குவா… இடம்பெற்ற இந்தியக் குறும்படம்!

மிஷ்கினின் உளறல்களைக் கண்டித்த இளம் இசையமைப்பாளர்…!

அடுத்த கட்டுரையில்
Show comments