Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாமி இல்ல பூதமா? என்னடா படம் எடுக்குறீங்க - வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Webdunia
திங்கள், 4 ஜூன் 2018 (11:07 IST)
நடிகர் விக்ரம் நடித்துள்ள சாமி 2 படத்தின் டிரெய்லர் வீடியோ கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

 
இயக்குனர் ஹரி ஏற்கனவே விக்ரமை வைத்து சாமி படத்தை எடுத்திருந்தார். அப்படம் பெரிய வெற்றி பெற்றது. அதன் பின் சூர்யாவை வைத்து சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய போலீஸ் அதிகாரி பற்றிய கதைகளை எடுத்தார். இதில், சிங்கம், சிங்கம் 2 இரு படங்களும் ரசிகர்கள் பெரிதும் கொண்டானர். இந்நிலையில், விக்ரமை வைத்து சாமி 2 படத்தை தற்போது எடுத்து முடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது.
 
இந்த ட்ரெய்லரில் ‘ நான் சாமி இல்லை... பூதம்’, நான் தாய் வயித்துல பிறக்கல, பேய் வயித்துல பொறந்தேன்’ என விக்ரம் பஞ்ச் வசனங்கள் பேசுகிறார். மேலும், வழக்கம் போல் ஹரி படத்தில் இடம் பெறும் அதிரடி சண்டை காட்சிகளும் அனல் பறக்கிறது.
 
ஆனால், யூடியூப்பில் இதைக் கண்ட சினிமா ரசிகர்கள் இந்த டிரெய்லர் நன்றாக இல்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர்.  மேலும், விக்ரம் நல்ல நடிகர் அவர் சினிமா கேரியை கெடுத்து விடாதீர்கள் என ஹரிக்கு பலரும் கமெண்ட் பதிவு செய்துள்ளனர். மேலும், நல்ல வசனங்களை டிரெய்லரில் எதிர்பார்த்தேன். ஆனால், அப்படி எதுவுமில்லை என விக்ரம் ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.
 
சிலர் மரண மொக்கை, மொக்கை ட்ரெய்லர், என்னடா படம் பண்ணுறீங்க!! சாமி இல்ல பூதமா? இதற்கு நானே படத்த இயக்கியிருப்பன், இன்னக்கி இருக்க நெலமயில எவனும்  போலீஸ் படத்த போய் பாப்பான்னு தோனல, ஒரு காலத்துல விஜய் அஜித்துக்கே tough competition கொடுத்தவர் அவர் போய் இப்படி பண்ண எப்படி ட உங்களுக்கு மனசு வந்துச்சு என்றெல்லாம் ஏகத்துக்கும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

மாடன் லுக்கில் ஜொலிக்கும் ஆரத்தி மாளவிகா மோகனன்… ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments