Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆட்டோமொபைல் ஆயிலுக்கு விளம்பரம் செய்யும் ஜூலி

Advertiesment
ஆட்டோமொபைல் ஆயிலுக்கு விளம்பரம் செய்யும் ஜூலி
, வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (11:30 IST)
பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கலைஞர் டிவியில் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் ஜுலி மெல்ல  திரையுலகத்திலும் காலடி எடுத்து வைத்துள்ளார். 
இதனை தொடர்ந்து ஒரு அப்பளம் விளம்பரத்தில் இவர் நடித்துள்ளார். அப்பளத்தை அடுத்து தற்போது ஆட்டோமொபைல் ஆயிலுக்கு விளம்பரம் செய்துள்ளார் ஜூலி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு ஜூலிக்கு கிடைத்தது. இதையடுத்து  அவர் விமலின் மன்னர் வகையறா படத்தில் கவுரவத் தோற்றத்தில் வந்தார். தற்போது உத்தமி படத்தில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.
 
அப்பள விளம்பரத்தில் நடித்த ஜூலி அடுத்ததாக டிடிடி நிறுவனத்தின் ஆட்டோமொபைல் ஆயிலுக்கு விளம்பரம் செய்துள்ளார். அந்த ஆயிலை வாங்குமாறு அவர்  மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். அப்பளம், ஆயில், கவுரவத் தோற்றம், ஹீரோயின் என்று ஜூலி அடுத்தடுத்து வளர்ந்து கொண்டிருப்பதாகக் கூறி அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
எப்பவும்போல ஒரு சில நெட்டிசன்கள் ஜூலியை கலாய்த்து ட்வீட் செய்தும் வருகின்றனர். அதில் ஒருவர் பெட்ரோல் விலை ஏறிப் போயிருக்கும் இந்த நேரத்தில் வந்து ஆயிலை வாங்குமாறு சொல்கிறீர்களே ஜூலி என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சாய் பல்லவியின் வைரல் புகைப்படம்