அரவிந்த் சாமிக்காக காத்திருக்கும் ‘நரகாசூரன்’

Webdunia
சனி, 13 ஜனவரி 2018 (17:11 IST)
அரவிந்த் சாமி டப்பிங் பேசுவதற்காக காத்திருக்கிறது ‘நரகாசூரன்’ படக்குழு

‘துருவங்கள் 16’ என்ற தன்னுடைய முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் கார்த்திக் நரேன். இவர் இரண்டாவதாக இயக்கியுள்ள படம் ‘நரகாசூரன்’. இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷண், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ளனர்.
 
ரான் யேதான் யோகன் இசையமைக்க, சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘துருவங்கள் 16’ ஷூட்டிங் நடைபெற்ற ஊட்டியில்தான் இந்தப் படத்தின் ஷூட்டிங்கும் நடைபெற்றுள்ளது. மொத்தம் 41 நாட்கள் படப்பிடிப்பைத் திட்டமிட்டு, அதன்படியே 41 நாட்களில் ஷூட்டிங்கை முடித்துவிட்டார் கார்த்திக் நரேன்.
 
இயக்குநர் கெளதம் மேனனுன், கார்த்திக் நரேனுடன் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அனைத்தும்  முடிந்துவிட்ட நிலையில், அரவிந்த் சாமி டப்பிங் பேச வேண்டியது மட்டுமே பாக்கி. அதுவும் முடிந்துவிட்டால் சென்சாருக்கு அப்ளை செய்து, பிப்ரவரியில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வா வாத்தியார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடக்கம்… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த டான்ஸரா?... ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட கீர்த்தி சுரேஷ்!

ரிவால்வர் ரீட்டா ஆக்‌ஷன் படம்தான்… ஆனா குடும்பத்தோட பாக்கலாம் – கீர்த்தி சுரேஷ் உறுதி!

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் ‘கைதி 2’ இல்லையா?.. தீயாய்ப் பரவும் தகவல்!

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments