'அஜீத்தைச் சந்திக்க 10 வருடங்களாகக் காத்திருக்கிறேன்” என இயக்குநர் ஷெல்லா தெரிவித்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யாவிடம் ‘வாலி’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் ஷெல்லா. அப்போது ஏற்பட்ட நட்பில், அஜீத்திடம் கதை சொன்னார். அவரும் ஓகே சொல்ல, அஜீத், அசின் நடிப்பில் ஆழ்வார் படத்தை எடுத்தார் ஷெல்லா.
இந்நிலையில் அஜீத்தின் பிறந்தநாள் குறித்து அவரிடம் பேசியபோது, “அந்தப் படத்துக்காக 87 நாட்கள் ஷூட்டிங் போனோம். அந்த 87 நாட்களும் இப்போதும் மனதில் பசுமையான நினைவுகளாக உள்ளன. அஜீத், தமிழ்நாட்டு மக்களின் ஆழ்வார்.
அஜீத்தை மறுபடியும் இயக்க வேண்டுமென தினம் தினம் இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன். நிச்சயம் அது பிளாக் பஸ்டர் படமாக இருக்கும். ‘ஆழ்வார்’ படம் கடந்த 2007ஆம் ஆண்டு ரிலீஸானது. அதற்குப் பிறகு 10 வருடங்களாக அஜீத்தைச் சந்திக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் ஷெல்லா.