Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐஸ்வர்யாக்கு டிவிட்டர் மூலம் வாழ்த்து கூறிய ரஜினி!!

ஐஸ்வர்யாக்கு டிவிட்டர் மூலம் வாழ்த்து கூறிய ரஜினி!!
, சனி, 17 டிசம்பர் 2016 (10:13 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினி தனது மகள் ஐஸ்வர்யா தனுஷ் எழுதியுள்ள புதிய புத்தகத்திற்கு டிவிட்டர் மூலமாக தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

 
ஐஸ்வர்யா தனுஷ், முதன் முறையாக தனது வாழ்வில் நடந்த, சுவாரஸ்யமான விஷயங்களையும் தனது தந்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றியும், சோகமான மற்றும் பாடம் கற்ற நிகழ்வுகளை புத்தகமாக எழுதியுள்ளார். 'ஸ்டாண்டிங் ஆன் அன் ஆப்பிள் பாக்ஸ்' (Standing on an Apple Box) எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதியுள்ள அந்த புத்தகத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளான (டிசம்பர் 12) அன்று உலகப் புகழ்பெற்ற 'ஹார்ப்பர் காலின்ஸ்' (Harpercollins) பதிப்பகத்தின் இந்தியப் பிரிவு வாங்கி வெளியிட்டுள்ளது.
 
இந்நிலையில் தனது மகளின் எழுத்தாளர் அவதாரத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், டிவிட்டர் வாயிலாக வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.”எனது மகள் முதன் முதலாக எழுதியுள்ள ’ஸ்டாண்டிங் ஆன் அன் ஆப்பிள் பாக்ஸ்’ புத்தகத்தை வாசகர்கள் விரும்புவார்கள் என நம்புகிறேன்.” கடவுளின் ஆசிர்வாதங்கள் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

webdunia

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜாதி அவசியம்: சைத்தான் நாயகி பேட்டி!!