Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் வைத்த புகார்ப்பெட்டி… முதல் புகாரே விஷால் மீது தானாம்…

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (15:23 IST)
தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் வைத்த புகார்ப்பெட்டியில் விழுந்த முதல் புகாரே விஷால் மீதுதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.


 

 
நடிகர் சங்க செயலாளர் ஆனபோதும் சரி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆனபோதும் சரி… பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சில நடவடிக்கைகளை சிலர் எதிர்த்தாலும், பல நடவடிக்கைகளை பாராட்டி ஏற்றுக் கொள்கின்றனர். குறிப்பாக, சமீபத்தில் பெப்சிக்கு எதிராக எடுத்த நடவடிக்கையை திரையுலகமே பாராட்டியது.
 
இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார்ப்பெட்டி ஒன்றை நேற்று வைத்துள்ளார் விஷால். மற்றவர்கள் மீது நேரடியாகக் கூற முடியாத புகார்களை, இந்தப் பெட்டியில் பெயர் குறிப்பிடாமல் போடலாம் என்பது அவருடைய எண்ணம். ஆனால், இந்தப் பெட்டியில் விழுந்த முதல் புகாரே விஷாலைப் பற்றித்தான் என்கிறார்கள். ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா, ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு மற்றும் கார்த்தி என சூர்யாவின் சொந்தக்காரர்கள் பிடியில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் இருப்பதாகவும், விஷால் அதைக்கண்டு கொள்ளவில்லை என்றும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளதாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments