Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வந்துட்டேன்னு சொல்லு...நாங்க ஓவியா ஆர்மி - பட்டைய கிளப்பும் பாடல் (வீடியோ)

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (14:27 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல கோடி ரசிகர்களின் மனதை அள்ளிய நடிகை ஓவியா பற்றிய பாடல் ஒன்றை பாடி வீடியோவை ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.


 

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது நடவடிக்கை காரணமாக ரசிகர்களை கவர்ந்தவர்  ஓவியா. வெளிப்படையான தன்மை, எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பது, காதலாகி உருகுவது, முகத்திற்கு நேராக பேசுவது என பலரின் மனதில் இடம் பிடித்தார் ஓவியா.
 
அதனாலேயே, அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். அதேபோல்,  அந்த நிகழ்ச்சியில் உள்ள ஜூலி, காயத்ரி ஆகியோர் ஓவியாவிற்கு எதிராக செயல்பட்ட போதும், அவரை அழ வைத்த போதும், ஓவியா ஆர்மி, ஓவியா பேரவை எனத் தொடங்கி அவருக்கு ஆதரவாகவும், காயத்ரி, ஜூலி ஆகியோருக்கு எதிராகவும் சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்துகள் மற்றும் மீம்ஸ்களை அள்ளித் தெளித்தனர். 
 
அதன் பின் தன்னுடைய காதலை ஆரவ் ஏற்காததால், மனமுடைந்த ஓவியா நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அவர் வெளியேறிவிட்டதால், பலரும் அந்த நிகழ்ச்சியை பார்ப்பதையே தவிர்த்து வருகின்றனர்.
 
இந்நிலையில், இலங்கையை சேர்ந்த சில இசைக் கலைஞர்கள் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். பிரேம்ராஜ் என்பவர் அதற்கு இசையமைத்துள்ளார்.  இந்த பாடலை யஜீவன், பிரசாதன் மற்றும் பிரேம்ராஜ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். 
 
ஓவியாவை புகழ்ந்து பாடப்பட்டுள்ள இப்பாடல் ஓவியா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இப்பாடல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments