Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வடிவேலு மேல் பைனான்சியர் புகார் – தலைமறைவான வைகைப்புயல் !

Advertiesment
வடிவேலு மேல் பைனான்சியர் புகார் – தலைமறைவான வைகைப்புயல் !
, செவ்வாய், 7 ஜனவரி 2020 (20:44 IST)
தனக்கு தரவேண்டிய 2 கோடி ரூபாய் பணத்தைத் தராமல் வடிவேலு மிரட்டுவதாக எலி படத்தின் பைனான்சியர் ராம்குமார் புகார் அளித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு வடிவேலு ஹீரோவாக நடித்த திரைப்படம் எலி. அந்த படம் பைனான்ஸ் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட போது வடிவேலுவின் நண்பரான ராம்குமார், தயாரிப்பாளர் சதிஷ்குமாருக்கு 2015 ஆம் ஆண்டு 2 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளார்.

ஆனாலும் படம் ரிலிஸான பின்னரும் அந்த பணத்தை வடிவேலுவும் தயாரிப்பாளரும் தராமல் இழுத்தடித்துள்ளனர். அதை ராம்குமார் கேட்க முயன்ற போது இருவரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாக 2015 ஆம் ஆண்டு ராம்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்த்துக்கொள்வதாக வடிவேலு தரப்பில் சொல்லப்பட்டது.

ஆனால் இன்றுவரை பணத்தை தராமல் வடிவேலு தனது தம்பி மூலம் மிரட்டல் விடுவதாக ராம்குமார் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வடிவேலு மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகி விட்டதாக சொல்லப்படுகிறது. 

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வசீகர குரல் மன்னன் சித் ஸ்ரீராமின் "All Love No Hate" - தென்னிந்திய இசைப் பயணம் 2020