Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா எழுத்தாளர்கள் கஷ்டத்தில் உள்ளனர் - பிரபல இயக்குனர்

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (13:31 IST)
சினிமா எழுத்தாளர்கள் கஷ்டத்தில் உள்ளனர் என்று இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
 

தமிழ் சினிமாவின் 80, 90 களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பாக்யராஜ். இவர் திரைக்கதை மன்னன் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர்.

இந்த நிலையில், வெற்றி, ஷிவானி ஆகியோர் நடிப்பில், செல்வகுமார் இயக்கியுள்ள பம்பர் என்ற பட நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் பாக்யராஜ், சினிமா துறையில் யோசிக்காமல் படம் எடுப்பவர்கள் நிறைய உள்ளனர். இப்படத்தை யோசித்து எடுத்துள்ளனர்.  சினிமாவில் புரியாத பாடல்ககள் வந்து கொண்டிருக்கும்போது, இப்படத்தில் பாடல்கள் நன்றாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

வெற்றி நல்ல கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். படத்தில் பாடல் பாடுபவர்களில் இருந்து பணியாற்றும் அனைவருக்கும் உரிமையுண்டு, ஆனால், எழுத்தாளர்களுக்கு உரிமையில்லை. இதற்குக் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எனப் போட்டுக் கொண்ட நானும் ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளளார்.

மேலும், சினிமா எழுத்தாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. எழுத்தாளர்கள் கஷ்டத்தில் உள்ளனர் தெலுங்கு சினிமாவில் எழுத்தாளர்களுக்கு நல்ல மரியாதையுண்டு என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாக்கில் குங்குமப்பூ.. ஷாருக்கான், அஜய்தேவ்கன் மீது வழக்கு!

ரகுல் ப்ரீத் சிங்கின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

மஞ்சள் உடையில் க்யூட் லுக்கில் கலக்கும் திவ்யபாரதி!

அஜித் படத்தைத் தனுஷ் இயக்க வாய்ப்பே இல்லை… பிரபலத் தயாரிப்பாளர் உறுதி!

ஜெய் ஒரு ப்ளேபாய்… ஊமைக் குசும்பன்… பிரபல நடிகை ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments