Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடி ரிலீஸில் ’கொத்துக்கறி’ போடப்படும் தனுஷின் ராயன்!

vinoth
திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (09:45 IST)
நடிகர் தனுஷ் நடித்து, இயக்கிய அவரின் 50 ஆவது படமான ராயன் ஜூலை 26 ஆம் தேதி வெளியான நிலையில் நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. படத்தில் தனுஷோடு சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடித்திருந்தனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார்.

படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் கலக்கியது. தனுஷின் 50 ஆவது படம் என்ற பிராண்டாடோடு வெளியான இந்த படத்தை ரசிகர்கள் லாஜிக் எல்லாம் பார்க்காமல் கொண்டாடினர். படம் மிகப்பெரிய அளவில் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் சினிமா ஆர்வலர்கள் இந்த படம் ஒரு உள்ளீடற்ற திரைப்படம் எனக் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் வெள்ளிக் கிழமை ராயன் திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது. அதுமுதல் படத்தைப் பார்த்த பல ரசிகர்கள் மீம்களாகப் போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். முக்கியமாக தனுஷ் மற்றும் அவர் தம்பிகளுக்கு இடையிலான முரண் சுத்தமாக செட் ஆகவில்லை என்று கலாய்த்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்க்விட் கேம்ஸ் சீசன் 2 ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்பிளிக்ஸ்!

கனடா நாட்டில் வாழும் தமிழ் பெண்ணின் போராட்டம் சொல்லும் படம் "ஆக்குவாய் காப்பாய்"

அடுத்த படம் பற்றிய தகவல் இன்று வெளியாகும்.. தனுஷ் கொடுத்த அப்டேட்!

படங்களை ரீமேக் செய்வது அலுப்பான விஷயம்… இயக்குனர் சுந்தர் சி கருத்து!

பிரசாந்த் நீல் பெரிய இயக்குனர் என்பதால் அவர் படத்தில் நடிக்கவில்லை… ஜூனியர் என் டி ஆர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments