எங்க அப்டேட்தான்! இல்ல.. எங்க அப்டேட்! ரசிகர்கள் மோதல்! வகையாய் சிக்கிய சன் பிக்சர்ஸ்

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (14:41 IST)
நடிகர் ரஜினி மற்றும் விஜய் உள்ளிட்டவர்களின் படங்களை தனித்தனியாக தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் படத்தின் பெயரை சொல்லாமல் அப்டேட் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. நடிகர் ரஜினி சட்டமன்ற தேர்தலில் கட்சி தொடங்கி போட்டியிட இருப்பதால் அண்ணாத்த பட பணிகளை விரைவாக முடிக்க முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய்யின் தலைப்பு அறிவிக்கப்படாத 65வது படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக முன்னதாகவே செய்திகள் வெளியானது.

இதுதவிட நடிகர் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் கர்ணன் படத்தையும், சூர்யாவின் 40வது படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது டிவிட்டரில் பதிவிட்டுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளது, அதில் மெகா அறிவிப்பு என்று தலைப்பிட்டு கீழே நாட்கள் மணி நேரங்கள் ஓடுகிறது. அதில் இன்று, நாளை, ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 31 ஆகிய நாட்கள் காட்டப்படுகின்றன.

இதில் ஏதோ ஒரு நாளில் முக்கிய அப்டேட் வெளியாக உள்ளதாக கூறப்படும் நிலையில் அது விஜய் பட அப்டேட்டா? அண்ணாத்த அப்டேட்டா? சூர்யா பட அப்டேட்டா அல்லது தனுஷின் கர்ணன் பட அப்டேட்டா? என ரசிகர்களிடையே மோதல் எழுந்துள்ளது. தங்களது விருப்ப நாயகரின் பட அப்டேட்டை வெளியிட வேண்டும் என அவரவர் ரசிகர்கள் ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்ய தொடங்க ட்விட்டர் முழுவதும் ட்ரெண்டிங்கில் இந்த ரசிகர்களின் ஹேஷ்டேகே நிறைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments