Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘விவேகம்’ படத்தைக் கழுவியூற்றும் அஜித் ரசிகர்கள்

‘விவேகம்’ படத்தைக் கழுவியூற்றும் அஜித் ரசிகர்கள்
, வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (13:16 IST)
அஜித் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘விவேகம்’ படத்தை, அஜித் ரசிகர்களே கழுவியூற்றி வருகின்றனர்.



 
சிவா இயக்கத்தில், அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் ‘விவேகம்’. சிவா – அஜித் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் இது. இவர்கள் கூட்டணியில் ஏற்கெனவே வெளியான ‘வீரம்’, ‘வேதாளம்’ படங்கள் ஹிட்டானதால், இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது.

வேறெந்த படங்களையும்விட இந்தப் படத்தை முதல் நாளே பார்த்துவிட ரசிகர்கள் துடித்தனர். அதனால், சென்னையில் ஒரு டிக்கெட்டை 1500 ரூபாய் கொடுத்து கூட வாங்கிச் சென்றனர். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை என்றே தெரிகிறது. முதல் நாள் முதல் ஷோ பார்த்த ரசிகர்கள், படத்தைப் பற்றி எதிர்மறையான விமர்சனங்களையே கொடுத்து வருகின்றனர். சிலருக்கு மட்டுமே படம் பிடித்திருப்பதாகத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் அப்பாவாக நடிக்க வேண்டியவர் - நடிகர் சர்ச்சை கருத்து