Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கவர்ச்சி கடல் நடிகைக்கு ரசிகர் மன்றம்

Advertiesment
கவர்ச்சி கடல் நடிகைக்கு ரசிகர் மன்றம்
, புதன், 10 மே 2017 (15:15 IST)
கவர்ச்சி நடிகைக்கு தமிழ்நாட்டில் ரசிகர் மன்றம் தொடங்கி ஆனந்த அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள் இளைஞர்கள்.


 

 
தனக்குப் பிடித்த நடிகர் – நடிகைகளுக்கு ரசிகர் மன்றம் தொடங்குவதெல்லாம் 1980, 90களில் ஃபேஷனாக இருந்தது. தங்கள் படத்தை வெற்றிபெற வைப்பதற்காக நடிகர்கள், காசு கொடுத்து ரசிகர் மன்றங்களை நடத்திய காலமெல்லாம் உண்டு. ஆனால், நடிகைகள் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. தற்போது, த்ரிஷா மற்றும் நயன்தாராவிற்கு ரசிகர் மன்றம் இருக்கிறது. சமீபத்தில் கூட கீர்த்தி சுரேஷுக்கு கூட ரசிகர் மன்றம் திறந்தனர்.
 
ஆனால், முதன்முதலாக கவர்ச்சி பட நடிகை ஒருவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்துள்ளனர் தமிழ் இளைஞர்கள். கனடா நாட்டைச் சேர்ந்த சன்னி லியோன், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். ஆபாசப் படங்களில் நடித்துள்ள அவர் தற்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார்.
 
தமிழில் கூட ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இவருக்கு, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுக்காவில் உள்ள துத்திக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ரசிகர் மன்றம் தொடங்கியுள்ளனர். சன்னி லியோன் படங்களுடன், அவர்கள் படங்களையும் சேர்த்து பிளக்ஸ் அடித்து ஊரில் நட்டுவைத்து ஆனந்தப்பட்டுள்ளனர் இளைஞர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘வனமகன்’ தள்ளிப்போனது ஏன்?