Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’மாஸ்டர் ’’பட சிறப்புக் காட்சிகளுக்கான வேலையில் விஜய் ரசிகர்கள் !!!

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (18:03 IST)
விஜய்யின் மாஸ்டர்  படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் இப்படத்தில் சிறப்புக் காட்சிகளுக்கான வேலையில் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விஜய் ,சேதுபதி, நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

வரும் ஜனவரி 13 ஆம் தேதி இப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதாகப் படக்குழு தெரிவித்த நிலையில் நடிகர் விஜய் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையேற்ற தமிழக அரசு சமீபத்தில் திரையரங்கில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த சினிமா துறையினரும், ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், மாஸ்டர் படம் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளதால் ஏற்கனமே சிட்டி ஸ்டோரி, பாடல் வெளியாகி வைரலான நிலையில், இன்று மாலை 7 மணிக்கு மாஸ்டர் ரெய்ட் பாடல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள்  #MasterRaid  என்ற ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜய்யின் மாஸ்டர் மடம் ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸாகவுள்லதால், இப்படத்தை ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்ய விஜய் ரசிகர்கள் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது கோவையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள், மாஸ்டர் படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கான வேலையில் ஈடுபட்டிருந்த புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்துக்காக உடல் எடையைக் குறைக்கும் விஜய் சேதுபதி!

ஸ்ரீதேவி பயோபிக் உருவாகுமா?... கணவர் போனி கபூர் பதில்!

குட் பேட் அக்லி படத்துக்கும் சிம்புவின் AAA படத்துக்கும் இப்படி ஒரு தொடர்பு இருக்கா?

தக் லைஃப் படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவு நேரமா?... வெளியான தகவல்!

நான் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்… பிரபல கராத்தே மாஸ்டர் ஹுசைனி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments