நடிகர் ஆர்யா ‘ஜல்லிக்கட்டு என்றால் என்ன?’ என்ற தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதற்கு தமிழ் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
தமிழக்கத்தின் கலாச்சாரா விளையாட்டுக்களுல் ஒன்றான ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கு மத்திய அரசிடமும், நீதிமன்றத்தையும் தொடர்ந்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், தமிழக மக்களும் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிச்சயம் நடத்துவதற்கான அனுமதி பெற்றுத்தரப்படும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கூறியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு குறித்த உணர்வுப் பூர்வமான நிலையில், தமிழக மக்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களது உணர்வுகளை இழிவுப்படுத்தும் விதமாக நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ’ஜல்லிக்கட்டு என்றால் என்ன?’ கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து பலரும் காட்டமாக பதில் அளிக்க அந்த பதிவை உடனடியாக நடிகர் ஆர்யா நீக்கிவிட்டார். ஆனாலும், தமிழ் படங்களில் அதிகம் நடித்துவரும் நடிகர் ஆர்யா, தமிழர்களின் உணர்வுப் பூர்வமான விஷயங்களில் தலையிடுவது முறையானது அல்ல என்று சமூக வலைத்தளங்களில் கண்டங்கள் எழுந்து வருகிறது.