Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட திருந்த மாட்டாய்ங்க போலயே… மீண்டும் தலன்னு கூப்புடனுமாம்… மேனேஜரிடம் கோரிக்கை வைத்த ரசிகர்!

vinoth
வியாழன், 6 பிப்ரவரி 2025 (12:58 IST)
அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படத்துக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து ‘விடாமுயற்சி’ திரைப்படம் ரிலீஸாகியுள்ளது. இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் நிலையில், இந்திய நேரப்படி இன்று காலை 5 மணிக்கு வெளிநாடுகளில் இந்த படம் ரிலீஸ் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகி ரசிகர்களால் பாஸிட்டிவ்வாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 9 மணிக்கு சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டு தற்போது ரசிகர்கள் படம் பார்த்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதுவரை நேர்மறையான விமர்சனங்களே அதிகமாக வந்துகொண்டு இருக்கின்றன. படம் ரிலீஸாகும் நாளில் அஜித் போர்ச்சுகலில் ரேஸ் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் சென்னையில் படம் பார்க்க வந்த அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவை சூழ்ந்துகொண்ட அஜித் ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அதில் ஒரு முரட்டு ரசிகர் “சார், நான் படிச்சவன்தான் சார், IT துறையில் வேலை பார்க்கிறேன். தல கிட்ட அவர தலன்னு மட்டும் கூப்ட்டுக்கிறோம்னு சொல்லுங்க சார். அம்மாவ அம்மான்னுதான கூப்புடனும்” என கோரிக்கை வைத்துள்ளார். அஜித்தே தன்னை எந்த பட்டமும் சொல்லி கூப்பிட வேண்டாம் என சொன்னாலும் இவர்கள் அடங்க மாட்டார்கள் போலிருக்கிறதே.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments