Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விவேகம் படத்தின் நெகட்டீவ் விமர்சனங்கள் பற்றி கருத்து தெரிவித்த பிரபல பாடலாசிரியர்

விவேகம் படத்தின் நெகட்டீவ் விமர்சனங்கள் பற்றி கருத்து தெரிவித்த பிரபல பாடலாசிரியர்
, வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (09:59 IST)
அஜித்தின் விவேகம் படம் கடந்த வாரம் 24-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றபோதிலும், இப்போது வரை வசூலில் மாஸ் காட்டி வருகிறது. ரசிகர்களும் படத்திற்கு படக்குழு எதிர்ப்பார்த்த அளவிற்கு வரவேற்பை கொடுத்துள்ளனர்.

 
இந்நிலையில் சில நெகட்டீவ் விமர்சனங்கள் ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியுள்ளது. நெகட்டீவ் விமர்சனங்கள் குறித்து  பிரபல பாடகரும், பாடலாசிரியருமான அருண் ராஜா காமராஜ் கூறுகையில், வேண்டுமென்றே எதிர்மறை விமர்சனம்  செய்பவர்களுக்கு எந்தவித பதிலும் கூற வேண்டிய அவசியம் இல்லை. பதில் கூறுவதால் அவர்களை மதிப்பதாகிவிடும். உலகத்தில் எந்த ஒரு இயக்குனரும், எந்த ஒரு நடிகரும் தோல்வி இல்லாமல் தொடர்ந்து வெற்றி படங்கள் கொடுத்ததாக  சரித்திரம் இல்லை.
 
சமூக வலைதளங்களில் யூடியூப் தொடங்கி, விமர்சனம் போட்டு அதன் மூலம் சம்பாதிப்பவர்கள் தங்களுடைய சொந்த கருத்துக்களை திணித்து விமர்சனம் செய்வது தவறு என்று தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் வில்லன் நடிகருக்கு கிடைத்த பிக்பாஸ் சான்ஸ்