''ஜென்டில்மேன்- 2'' படத்திற்கு பாடல் எழுதும் பிரபல கவிஞர்

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2023 (11:07 IST)
கடந்த 1993ல் வெளியான திரைப்படம் ஜென்டில்மேன். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்  நடிப்பில் வெளியான இப்படம்  சூப்பர் ஹிட் ஆனது. 

இப்படத்தை அப்போதைய காலத்தில் அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்தவர்  தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன்.

தற்போது, அவர் நீண்டகாலத்திற்கு பின் மீண்டும் சினிமா தயாரிப்பில் இறங்கியுள்ளார்.
சமீபத்தில்,  ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இருப்பதாக கே.டி.குஞ்சுமோன் தெரிவித்த   நிலையில், இதற்காக  “ஜெண்டில்மேன் ஃபிலிம் இண்டர்நேஷனல்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.

இந்த படத்தை  கோகுல் பிரசாத்  இயக்கவுள்ளார். ஆஸ்கர் விருது வென்ற மரகதமணி நாயகியாக இசையமைக்கவுள்ளார். தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் சேத்தன் சீனுதான் ஹீரோவாக நடிக்க,  நயன்தாரா சக்ரவர்த்தி ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

 இப்படத்தின் ஒளிப்பதிவாளராக அஜயன் வின்செண்ட், கலை இயக்குனராக தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் தோட்டா தரணி ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ஜென் டில்மேன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் எழுதிய வைரமுத்து இப்பட்த்திற்கும் பாடல் எழுதுகிறார்.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

’’கொச்சியில் இருக்கிறேன்
ஜென்டில்மேன் 2
படத்திற்குப் பாட்டெழுதுகிறேன்

ஆஸ்கர் விருதுக்குப் பிறகு
கீரவாணி(மரகதமணி)
இசையமைக்கும்
முதல் தமிழ்ப்படம்

அதிகாலைப் பறவைகளாய்ப்
பாடிக்கொண்டிருக்கிறோம்
கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார்

குஞ்சுமோன் படத்துக்குக்
குறையிருக்குமா பாட்டுக்கு?
விரைவில்
அர்ப்பணிக்கிறோம் நாட்டுக்கு’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments