Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமின் கணவர் மரணம்

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2018 (15:36 IST)
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் அவர்களின் கணவர் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். இந்த செய்தி திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான வாணி ஜெயராம் கலைவாணி என்ற இயற்பெயர் கொண்டவர். இவர் தனது பெயரான கலைவாணியுடன், கணவர் பெயரான ஜெயராம் பெயரை சேர்த்து வாணி ஜெயராம் என வைத்துக் கொண்டார். இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில்  சுமார் 10,000 பாடல்கள் பாடி, மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். தமிழகத்தை சேர்ந்த வாணி ஜெயராம் திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டில் ஆனார். பின் தனது பாடும் திறமையை வளர்த்துக் கொள்வதற்காக மீண்டும் தமிழகத்துக்கு வந்தார்.
 
இந்நிலையில், வாணி ஜெயராமனின் கணவர், உடல் நலக் குறைவால் சில நாட்கள் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வாணி ஜெயராமின் கணவர் ஜெயராம் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ‘சர்தார் 2’.. அடுத்தகட்ட பணிகள் இன்று முதல் ஆரம்பம்..!

ரஜினி - நெல்சனின் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தொடக்கம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு..!

ஸ்ரீதேவி படத்தின் 2ஆம் பாக அறிவிப்பு.. மகள் குஷி கபூர் தான் நாயகி..!

நாக்கில் குங்குமப்பூ.. ஷாருக்கான், அஜய்தேவ்கன் மீது வழக்கு!

ரகுல் ப்ரீத் சிங்கின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments