Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல பழம்பெரும் நடிகர் சாமிக்கண்ணு மரணம்

Advertiesment
பிரபல பழம்பெரும் நடிகர் சாமிக்கண்ணு மரணம்
, திங்கள், 5 ஜூன் 2017 (11:35 IST)
தமிழ் சினிமாவில் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ள பழம்பெரும் குணச்சித்திர நடிகர் சாமிக்கண்ணு உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.  தனது 8 வயதில் இருந்து நாடகங்களில் நடித்து வந்தசாமிக்கண்ணு, 1954ம் ஆண்டு வெளியான புதுயுகம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

 
சென்னை பள்ளிக்கரணையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 95 வயதான அவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம்  அடைந்தார். அவரின் இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெற்றது. அவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.  அன்னக்கிளி, வண்டிச் சக்கரம், ஜானி, போக்கிரி ராஜா, சகலகலா வல்லவன், என் ராசாவின் மனசிலே உள்பட 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சாமிக்கண்ணுவின் மரணத்திற்கு திரையுலகினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூன் 7ஆம் தேதி தனுஷின் ‘விஐபி 2’ டீஸர் வெளியீடு