Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி மரணம்!

Webdunia
புதன், 31 மே 2017 (10:27 IST)
மறைந்த பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா உடல்நலக் குறைவால் இன்று காலை பெங்களூரில்  காலமானார். சமீப காலமாகவே உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பர்வதம்மா(78), பெங்களூரில் உள்ள எம்.எஸ்.ராமையா  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.



கடந்த மே 14ஆம் தேதி தீவிர சிகிச்சை பிரிவில் டிரெக்கியொஸ்டோமி சிகிச்சை மூலம் இயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.40 மணியளவில் மரணமடைந்துள்ளார்.
 
தற்போது, பர்வதம்மாவின் உடல் பெங்களூரில் உள்ள பூர்ண பிரக்னா மைதானத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. பர்வதம்மாவின் மறைவுக்கு பல்வேறு திரை பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல்  தெரிவித்து வருகின்றனர். பர்வதம்மாவின் கண்கள் தானம் செய்துப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

லிங்குசாமி மேல் அதிருப்தியில் கமல்ஹாசன்… காரணம் இதுதானா?

கதைகட்டுவது இதயத்தை நோகச்செய்கிறது… விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு சைந்தவி விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments