Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல இந்தி இயக்குனர் படத்தில் தமன்னா !

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (17:54 IST)
தமிழ் சினிமாவில்  முன்னணி  நடிகை தமன்னா  பிரபல இந்தி இயக்குனர் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமன்னா. இவர் கேடி, வியாபாரி,  விஜய்யுடன்  சுறா, அஜித்துடன் வீரம், தனுஸுடன் படிக்காதவன், கார்த்தியுடன் சிறுத்தை , சூர்யாவுடன் அயன் என குறைந்த காலத்தில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக வலம் வந்தார்.

சில ஆண்டுகளாக இவருக்காக வாய்ப்புகள் குறைந்த நிலையில், இந்திப் படங்களில் தமன்னா  நடிக்க ஆர்வம் காட்டினார்.


ALSO READ: பத்திரிக்கையாளர்களை தாக்கினார்களா தமன்னாவின் பாதுகாவலர்கள்?

இந்த நிலையில், சாந்தினி பார், பேஜ் 3, கார்பரேட், பேஷன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மதுர் பண்டார்கர்  இந்தியில் அடுத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

நகைச்சுவை படமாக உருவாகவுள்ள இதில் தமன்னா பிரதான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக  மதுர் பண்டார்கர் தெரிவித்துள்ளார். இதனால் தமன்னா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5: 10 குக்குகள் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு.. லிஸ்ட் இதோ..!

சமூகத்திற்கான நல்ல படங்களை நடிகர்களால் கொடுக்க முடியாது- இயக்குநர் சந்தோஷ் நம்பிராஜன்!

கவிப்பேரரசு வைரமுத்து வைத்த தலைப்பு "வேட்டைக்காரி"

அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து அடுத்த சாகசத்தின் புத்தம் புதிய போஸ்டர்

அடுத்த கட்டுரையில்
Show comments