Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல நடிகை பூஜா பட்டிற்கு கொரொனா தொற்று !

Advertiesment
pooja bhatt
, சனி, 25 மார்ச் 2023 (20:58 IST)
பாலிவுட் பிரபல நடிகை பூஜா பட் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
 

கடந்த 2020  ஆம் ஆண்டு சீனாவில் இருந்து  இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கொரோனா பரவியது. இதில். பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

கொரொனாவில் 2வது, 3வது அலைகள்  பரவிய  நிலையில், இதன் உருமாறிய வடிவமான  எபோலா, ஒமிக்ரான் பரவியது. இந்த நிலையில், தற்போது, நாடு முழுவதும் இன்புளூயன்சா வைரஸ் பரவி வருகிறது.

மீண்டும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், பாலிவுட் நடிகையும், தயாரிப்பாளருமான பூஜாபட்டிற்கு பரிசோதனை நடத்தியதில், அவருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒரு வீடியோ பதிவிட்டுள்ள அவர், நாட்டில் இருந்து இன்னும் கொரொனா தொற்று அகலவில்லை. அனைவரும் எச்சரிக்கையுடன் இருந்து, முக்கவசம் அணிய வேண்டும் என்று கூறும் தன் பழைய வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'பத்து தல' பட 'ராவடி' பாடலின் வீடியோ ரிலீஸ்...இணையதளத்தில் வைரல்