இந்தி சினிமாவில் பிரபல நடிகை ரிங்கு சிங் ரிகும்ப் கோவிட்-19 தொற்றால் இன்று காலமானார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு ராஜ் ஷாண்டியாலா இயக்கத்தின் ஆயுஸ்மான் குரானா நடித்த படம் டிரீம் கேர்ள்( drem girl). இப்படத்தில் நடித்தவர் நடிகை ரிங்கு சிங் ரிகும்ப்.
இவருக்கு சமீபத்தில் கொரோனா அறிகுறி ஏற்பட்டது. அப்போது, வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார் அவர். பின்னர் சில நாட்களுக்கு முன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை மோசமான நிலையில், ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே அவருக்கு ஆஸ்துமா பாதிப்பு இருந்ததால் அவரது உடல் நிலை மேலும் மோசமாகி சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார். அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.