Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தெய்வமகள் சீரியல் ரேகா மரணம்?: நேரலையில் விளக்கம்!

தெய்வமகள் சீரியல் ரேகா மரணம்?: நேரலையில் விளக்கம்!

தெய்வமகள் சீரியல் ரேகா மரணம்?: நேரலையில் விளக்கம்!
, வெள்ளி, 5 மே 2017 (11:55 IST)
பிரபல சின்னத்திரை நடிகை ரேகா சிந்து வேலூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது   விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.


 
 
சென்னையில் இருந்து புறப்பட்ட நடிகை ரேகா சிந்துவின் கார் சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் பேரணாம்பட்டு அருகே சென்று கொண்டிருந்தபோது, சுண்ணாம்பு குட்டை என்ற இடத்தில் உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
 
இதனால் சம்பவ இடத்திலேயே நடிகை ரேகா சிந்து பலியானார். அவருடன் சென்ற மற்ற மூன்று பேரும் காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்தில் உயிரிழந்த ரேகா தமிழ், கன்னடம் மொழி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர்.

 

 
 
இந்நிலையில் தமிழில் தெய்வமகள் சீரியலில் நடிக்கும் வில்லி நடிகை ரேகா கிருஷ்ணப்பா தான் இறந்து விட்டார் என தகவல் பரவியதை அடுத்து பலரும் அதிர்ச்சியடைந்தனர். தெய்வமகள் சீரியல் மூலம் மிகவும் பிரபலமான அவரது தொலைப்பேசி எண்ணிற்கு பலரும் தொடர்பு கொண்டு அவரது மரணம் குறித்த செய்தியின் உண்மை தன்மை குறித்து கேட்டுள்ளனர்.
 
இதனையடுத்து தான் உயிருடன் தான் உள்ளேன் எந்த விபத்திலும் சிக்கவில்லை, பரவும் தகவல் வதந்தி என ரேகா கிருஷ்ணப்பா பேஸ்புக் நேரலையில் தோன்றி விளக்கம் கொடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போலீஸில் சிக்கிய ராணா: உதவ மறுத்த பிரபாஸ்!!