ஜாதி பெருமை பாடல்கள் எதிரொலி: மாமன்னன் போஸ்டரை நீக்கினார் ஃபகத் பாசில்..!

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2023 (08:36 IST)
மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படத்தில் வில்லனாக ஃபகத் பாசில் நடித்திருந்த நிலையில் அவரது கேரக்டரின் காட்சிகளை எடிட் செய்து அதற்கு பின்னணியாக ஜாதி பெருமைகள் கூறும் பாடல்களை இணைத்து இணையதளங்களில் சிலர் வைரல் ஆக்கினார். 
 
இது மிகப்பெரிய பிரச்சினையாக மாறியது. மாரி செல்வராஜ் இந்த படத்தில் என்ன சொல்ல நினைத்தாரோ அதற்கு நேர் மாறாக இந்த வீடியோக்கள் வைரலானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  
 
இந்த படத்தின் ஹீரோ போல் ஃபகத் பாசில் கொண்டாடப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் போஸ்டரை தனது பேஸ்புக்கில் கவர் ஃபோட்டோவாக ஃபகத் பாசில் வைத்திருந்த நிலையில் திடீரென அவர் அந்த போட்டோவை நீக்கி உள்ளார். 
 
தனது பெயர் தேவையில்லாமல் ஜாதி பின்னணியில் அடிபடுவதை அடுத்து அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments