Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தி சினிமாவில் அறிமுகமாகிறாரா பஹத் பாசில்?... முன்னணி இயக்குனரோடு பேச்சுவார்த்தை!

vinoth
வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (08:24 IST)
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பஹத் பாசிலுக்கு மலையாள மொழி தாண்டியும் ரசிகர்கள் ஏராளம். அவரின் படங்கள் தமிழகத்திலும் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் நடித்திருந்த விக்ரம் மற்றும் புஷ்பா அகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக அமைந்தன.

சமீபத்தில் அவர் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய ஆவேஷம் திரைப்படம் பிளாக்பஸ்டராகி 150 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. இப்போது தமிழில் ரஜினிகாந்தோடு வேட்டையன் படத்தில் நடித்து வரும் அவர் அடுத்து இந்தி சினிமாவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னணி இயக்குனரான இம்தியாஸ் அலி இயக்கும் புதிய காதல் படத்தில் பஹத் பாசில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ஏ அர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. துல்கர் சல்மானுக்கு பிறகு தற்போது பஹத் பாசிலும் பாலிவுட் சினிமாவுக்கு செல்வது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த படம் பற்றிய தகவல் இன்று வெளியாகும்.. தனுஷ் கொடுத்த அப்டேட்!

படங்களை ரீமேக் செய்வது அலுப்பான விஷயம்… இயக்குனர் சுந்தர் சி கருத்து!

பிரசாந்த் நீல் பெரிய இயக்குனர் என்பதால் அவர் படத்தில் நடிக்கவில்லை… ஜூனியர் என் டி ஆர் பதில்!

மலையாளம், தெலுங்கை அடுத்து கன்னட சினிமாவிலும் பாலியல் தொல்லை: திடுக் புகார்..!

தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தம் - காலத்தின் கட்டாயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments