Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல ஓடிடியில் வெளியானது பஹத் பாசிலின் ஆவேஷம் திரைப்படம்!

vinoth
சனி, 11 மே 2024 (14:02 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே மலையாள சினிமா மிகவும் ஆரோக்யமான போக்கில் சென்று கொண்டிருக்கிறது. அங்கே நல்ல கதையம்சம் உள்ள படங்களும் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களில் வெளியான பிரேமலு, ப்ரமயுகம், மஞ்சும்மள் பாய்ஸ், ஆடு ஜீவிதம், வர்ஷங்களுக்கு ஷேஷம் மற்றும் ஆவேஷம் ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளன. இந்த படங்கள் கேரளா தாண்டியும் பிற மொழி ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

அப்படி கடந்த மாதம் ரிலீஸான பஹத் பாசில் நடித்த ஆவேஷம் என்ற திரைப்படமும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. வெளியாகி இரண்டாவது வாரத்தில் இந்த படம் திரையரங்குகள் மூலமாக 150 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. படத்துக்கு திரையரங்கில் கிடைத்த வரவேற்பு ஓடிடியிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத் இசைக்காக ஒரு தடவை பார்க்கலாம்.. விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ விமர்சனம்..!

71வது தேசிய விருது அறிவிப்பு.. ஹரிஷ் கல்யாண் நடித்த படத்திற்கு சிறந்த பட விருது..!

ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்த சென்சார்.. வன்முறை அதிகமா?

பாக்ஸ் ஆபிஸில் அசத்தும் 'மகாவதாரம் நரசிம்மா': ரூ.53 கோடி வசூல் சாதனை

அடுத்தடுத்த டிராப்புகள்.. தேசிய விருது வாங்கிய வெற்றிமாறனுக்கே இந்த நிலைமையா?

அடுத்த கட்டுரையில்
Show comments