Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தாங்க இன்னொரு 100 கோடி வசூல் படம்… தொடர்ந்து கலக்கும் மலையாள படவுலகு!

இந்தாங்க இன்னொரு 100 கோடி வசூல் படம்… தொடர்ந்து கலக்கும் மலையாள படவுலகு!

vinoth

, வியாழன், 25 ஏப்ரல் 2024 (10:22 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே மலையாள சினிமா மிகவும் ஆரோக்யமான போக்கில் சென்று கொண்டிருக்கிறது. அங்கே நல்ல கதையம்சம் உள்ள படங்களும் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களில் வெளியான பிரேமலு, ப்ரமயுகம், மஞ்சும்மள் பாய்ஸ், ஆடு ஜீவிதம், வர்ஷங்களுக்கு ஷேஷம் மற்றும் ஆவேஷம் ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளன. இந்த படங்கள் கேரளா தாண்டியும் பிற மொழி ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

அப்படி கடந்த மாதம் ரிலீஸான பஹத் பாசில் நடித்த ஆவேஷம் என்ற திரைப்படமும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. வெளியாகி இரண்டாவது வாரத்தில் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் பிரேமலு, மஞ்சும்மள் பாய்ஸ், ஆடு ஜீவிதம் மற்றும் ஆவேஷம் என நான்கு படங்கள் 100 கோடி ரூபாயைத் தாண்டி வசூல் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யின் அடுத்த படத்தை நான் இயக்குகிறேனா? வெற்றிமாறன் சொன்ன பதில்!