Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவேஷம் படத்தின் ஒட்டுமொத்த திரையரங்க வசூல் விவரம்… சாதனை படைத்த பஹத் பாசில்!

vinoth
வியாழன், 9 மே 2024 (06:52 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே மலையாள சினிமா மிகவும் ஆரோக்யமான போக்கில் சென்று கொண்டிருக்கிறது. அங்கே நல்ல கதையம்சம் உள்ள படங்களும் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களில் வெளியான பிரேமலு, ப்ரமயுகம், மஞ்சும்மள் பாய்ஸ், ஆடு ஜீவிதம், வர்ஷங்களுக்கு ஷேஷம் மற்றும் ஆவேஷம் ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளன. இந்த படங்கள் கேரளா தாண்டியும் பிற மொழி ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

அப்படி கடந்த மாதம் ரிலீஸான பஹத் பாசில் நடித்த ஆவேஷம் என்ற திரைப்படமும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. வெளியாகி இரண்டாவது வாரத்தில் இந்த படம் திரையரங்குகள் மூலமாக 150 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.

நாளை இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் கிட்டத்தட்ட தியேட்டர் வசூல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஹத் பாசிலின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை ஆவேஷம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாழை பட 25-வது நாள் கொண்டாட்டம் வெற்றி விழா!!

சூர்யா வின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி எப்போது? சூப்பர் அறிவிப்பு..!

தனுஷ் விவகாரத்தில் ஃபெப்சி அமைப்பு தலையீடு: தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்.

’கோட்’ படத்தின் 13 நாள் வசூல்.. தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

என்னது ரூ.1000 கோடியா? ரூ.500 கோடி கூட வரல.! கோட் படத்தின் வசூல் இவ்வளவுதானா.?

அடுத்த கட்டுரையில்
Show comments