Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரபிக் குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்!

அரபிக் குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்!
, வெள்ளி, 11 மார்ச் 2022 (16:04 IST)
விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடல் வெளியாகி இதுவரை 150 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

விஜய்யின் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல் இணையத்தில் தெறி ஹிட் அடித்து வருகிறது.  தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏபரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அரபி குத்து பாட்டு ஒன்று பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி பேன் இந்தியா ஹிட் ஆகி உள்ளது.

இந்த பாடல் வெளியானது முதல் தீயாய் பரவி வருகிறது. ரசிகர்கள் முதல் திரை உலகினர் வரை இந்த பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் பாடல் வெளியாகி கிட்டத்தட்ட 12 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்கள் என்ற மைல்கல்லைக் கடந்தது. இந்நிலையில் நேற்று இந்த பாடல் 150 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

இந்நிலையில் இந்த பாடலுக்கு இப்போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரும், முன்னாள் சி எஸ் கே வீரருமான பாஃப் டு பிளஸ்சி நடனமாடியுள்ள வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோவை இப்போது நெல்சன் தன்னுடைய சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உனக்கு ஏன்மா இந்த வேலை...? பிகினி வீடியோ வெளியிட்டு வாய் பிளக்க வைத்த வரலக்ஷ்மி!