Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மக்கள் செல்வன் VS லேடி சூப்பர் ஸ்டார்: வெற்றி யாருக்கு??

மக்கள் செல்வன் VS லேடி சூப்பர் ஸ்டார்: வெற்றி யாருக்கு??
, வியாழன், 30 மார்ச் 2017 (15:51 IST)
நாளை (மார்ச் 31) வெளியாக இருக்கும் நயன்தாராவின் டோரா படமும் விஜய் சேதுபதியுன் கவண் படமுன் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
டோரா:
 
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள டோரா திரைப்படம் நாளை வெளியாகவிருக்கிறது. 
 
இப்படத்தை தாஸ் ராமசாமி இயக்கியுள்ளார். சற்குணம் சினிமாஸ் மற்றும் ஆரா சினிமாஸ் ஒன்றிணைந்து படத்தை தயாரித்துள்ளது.

நயன்தாராவுடன் ஹரிஷ் உத்தமன், தம்பி ராமையா, சுலில் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் இசையமைத்துள்ளனர். 
 
நயன்தாராவின் நடிப்பில் திகில் அம்சங்களையும் உள்ளடக்கி உருவாகியுள்ள படம் டோரா. காரில் உள்ள ஆத்மா தான் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் வரை நயன்தாராவையே சுற்றுவதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு நயன்தாரா நடிப்பில் வெளியாகும் முதல் படம் டோரா. அவரின் திரையுலக வாழ்வில் இப்படம் மிகவும் சவாலான படமாக அமையும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், புரொமோஷனுக்காக திரைப்படத்தில் இடம்பெறும் 4 நிமிட படக் காட்சியை ஆரா தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 
கவண்: 
 
விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் இணைந்து நடித்துள்ள கவண் திரைப்படமும் நாளை வெளியாகிறது. 
 
இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் படத்தை தயாரித்துள்ளது. விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபஸ்டியன், விக்ராந்த், சாந்தினி தமிழரசன், ஜெகன், பாண்டியராஜன், ஆகாஷ்தீப் சாய்கல், பாஸ் வெங்கட், ஸ்ரீனிவாசன் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். 
 
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஊடக பின்னணியில் உருவாகியுள்ள 'கவண்' திரைப்படத்தில் சமூக அக்கறை பற்றியும், ஊடகங்களில் நடக்கும் அரசியல் பற்றியும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
அழுத்தமான கதையில் ஆக்க்ஷன், காதல் உள்ளிட்ட கமர்ஷியல் அம்சங்களும் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தின் ஒரு நிமிட காட்சியும் வெளியிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓ... இப்படிதான் வெள்ளையாக்கினாரா அந்த கருப்பு நடிகை!