Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் திமுகவிலோ அல்லது காங்கிரஸிலோ சேர்ந்திருக்கலாம்… ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து!

vinoth
வியாழன், 3 அக்டோபர் 2024 (14:26 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் ஆகஸ்ட் மாதம் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார். இதற்கான நிகழ்ச்சி சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் நடந்தது.

இதையடுத்து அவர் தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டை நடத்தவுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் விஜய் கட்சி ஆரம்பித்திருக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

இது சம்மந்தமாகப் பேசியுள்ள அவர் “விஜய் எல்லோர் வீட்டுப் பிள்ளையாகவும் இருக்கிறார். அவர் ஏன் கட்சி ஆரம்பித்தார் என்று தெரியவில்லை. நீட் எதிர்ப்பு எல்லாம் பேசும் அவர் காங்கிரஸிலோ அல்லது திமுகவிலோ இணைந்திருக்கலாம்.” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் அல்லு அர்ஜூனனுக்கு 14 நாட்கள் சிறை.. நீதிபதி அதிரடி உத்தரவு..!

ரசிகரை கொன்ற வழக்கில் தர்ஷனுக்கு ஜாமீன்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் க்யூட் போட்டோஷூட்!

அல்லு அர்ஜுனின் கைதுக்குப் பின்னால் அரசியல் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments