’எவர்கிரீன் ஸ்டார் பட்டம்’ பெற்றார் பிரபல நடிகை ! ரசிகர்கள் ஹேப்பி

Webdunia
திங்கள், 23 செப்டம்பர் 2019 (19:37 IST)
தமிழ் சினிமாவில் உள்ள அத்துணை நடிகர்களுடன் நடித்த நடிகை என்ற பெருமை பெற்றவர் நடிகை மீனா. தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல ஹிட் படங்களில் நடித்துள்ள நடிகை மீனாவுக்கு எவர் கிரீன் ஸ்டார் பட்டம் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் நடித்துவரும் நடிகை மீனா சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த நடிப்பில் வெளியான அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக  அறிமுகம் ஆனார். அதன் பின்னர் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான என் ராசாவில் மனசிலே படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.  அதன்பின்னர் பல்வேறு முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சின்னத்திரையில் நடித்து வந்த அவர், தற்போது வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.
 
இதுவரை தனது பெயருக்கு முன்னர் எந்தப் பட்டமும் போட்டுக் கொள்ளாமல் இருந்தவருக்கு, ’கரோலின் காமாட்சி’ என்ற வெப் சீரிஸ் தொடரின் போஸ்டரில் ’எவர் கிரீன் ஸ்டார் மீனா’ என்று பெருமைப் படுத்தியுள்ளனர்.

’இந்தப் பட்டம் நடிகை மீனாவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாவும், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் எனவும், இது மீனாவின் நடிப்புக்கும் அவரது சினிமா அனுபவத்துக்கு இந்தப் பட்டம் பொருந்தமாக உள்ளதாக வெப் சீரிஸ் இயக்குநர் வெர்னிக் தெரிவித்துள்ளார்’.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments