Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி ஆர் பி யில் பின்தங்கும் எதிர்நீச்சல் சீரியல்… முன்னேறும் இரண்டு சீரியல்கள்!

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2023 (12:40 IST)
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் டி ஆர் பி ரேட்டிங்கில் உச்சம் தொட்டது. சமீபத்தில் இந்த சீரியல் 9.3 என்ற புள்ளியை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர் சீரியல் குழுவினர். இந்நிலையில் இப்போது இந்த சீரியல் 500 ஆவது எபிசோட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியல் தமிழில் அடைந்த வெற்றியை அடுத்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி மற்றும் மராத்தி என ஐந்து மொழிகளில் டப் ஆகி ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

இந்த சீரியலின் இமாலய வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் அதில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவின் அட்டகாசமான நடிப்புதான். அவர் சமீபத்தில் மறைந்ததை அடுத்து அந்த கதாபாத்திரத்தில் நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

ஆனால் சீரியலில் மொத்தமே அவர் இதுவரை 2 நாட்கள் மட்டுமே காட்டப்பட்டுள்ளார். வந்ததும் அவரை போலீஸ் கைது செய்து அழைத்து சென்றுவிடுவது போல அமைத்தனர். இந்நிலையில் டிஆர்பியில் கலக்கிய எதிர்நீச்சல் சீரியல் இப்போது பின்தங்குவதாகவும், விஜய் டிவியின் சிறகடிக்கும் ஆசை மற்றும் ஜி தமிழின் இதயம் ஆகிய இரண்டு சீரியல்களும் எதிர்நீச்சல் சீரியலுக்கு டஃப் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி திருவினையாக்கும்.. செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்.. அஜித் ரசிகர்கள் குஷி..!

பிரபல இயக்குனருக்கு இப்படி ஒரு நோயா? – நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்திய கரண் ஜோஹர்!

இன்று ‘தல’ தோனி பிறந்தநாள்! சல்மான் கானோடு கொண்டாடிய தோனி! - வைரலாகும் வீடியோ!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments