Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கண்டெண்ட்தான் கிங்… இத்தனை மொழிகளில் டப் ஆகிறதா எதிர்நீச்சல்?

Advertiesment
கனிகா
, சனி, 15 ஜூலை 2023 (08:07 IST)
சன் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் படு பயங்கரமான ஹிட் அடித்துள்ளது. தொலைக்காட்சிக்கு வெளியேயும் இந்த சீரியல் ரசிகர்களைக் கவர்ந்து முகநூல், இன்ஸ்டாகிராமில் எல்லாம் துணுக்குகள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதற்கு இந்த சீரியலில் ஆணாக்கவாதியான குணசேகரனுக்கும்(மாரிமுத்து), அவரது குடும்பத்து பெண்களுக்கு இடையே நடக்கும் மோதல் போராட்டமே காரணமாக அமைந்துள்ளது. சீரியலின் முக்கிய வேடங்களில் கனிகா, நடிகர் மாரிமுத்து, மதுமிதா, ஹரிப்ரியா, கமலேஷ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் நடித்து வருகின்றனர்.

சமீபத்திக் இந்த சீரியல் டி ஆர் பி ரேட்டிங்கில் உச்சம் தொட்டது. சமீபத்தில் இந்த சீரியல் 9.3 என்ற புள்ளியை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர் சீரியல் குழுவினர். இந்நிலையில் இப்போது இந்த சீரியல் 400 ஆவது எபிசோட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த சீரியல் தமிழில் அடைந்த வெற்றியை அடுத்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி மற்றும் மராத்தி என ஐந்து மொழிகளில் டப் ஆகி ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சம்ந்தா பட போஸ்டரால் எழுந்த சர்ச்சை… கேள்வி எழுப்பிய நெட்டிசன்ஸ்!