Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எண்டெர்டெயின்மெண்ட், லவ், ஆக்‌ஷன் எல்லாம் உண்டு! - 'ஜோ' படத்தின் ப்ரீ ரிலீஸ் வெளியீட்டு விழா!

Joe
, திங்கள், 20 நவம்பர் 2023 (17:11 IST)
விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ அருள் நந்து தயாரிப்பில், ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் நடித்துள்ள  ‘ஜோ’ படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சென்னை வடபழனியில் அமைந்தள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்றது


 
இந்நிகழ்சியில் விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பாளர் டி. அருள் நந்து பேசியதாவது

 "15 வருடங்களாக சினிமா செய்ய வேண்டும் என்பது எங்களுடைய கனவு. அதை 2023 செய்யக் காரணம் ஏகன்தான். அவர் எங்களிடம் வந்து ரியோவிடம் ஒரு கதையுள்ளது அதை செய்தால் நன்றாக இருக்கும் எனக் கூறினார். ரியோ கதை சொன்னது மிகவும் பிடித்திருந்தது. உடனே படம் பண்ணலாம் என முடிவெடுத்து விட்டோம். படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். படத்தை நான் இதுவரை எட்டு முறை பார்த்துள்ளேன். ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் புதிதாக உள்ளது. படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கையுள்ளது".

 பாடகர் ஆண்டனி தாசன்,

 "ரியோவுக்காக இரண்டாவது முறை பாடியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.  ரசிகர்களைப் போலவே நானும் இந்தப் பாடலைக் கேட்க ஆர்வமாக உள்ளேன். இந்த வாய்ப்புக் கொடுத்த இசையமைப்பாளர் சித்துகுமாருக்கும், பாடலாசிரியர் கிரண் வரதனுக்கும் நன்றி. ரசிகர்களுக்கும் பாடல் நிச்சயம் பிடிக்கும்".

 விஜே ராக்கேஷ்,

 "இந்தப் படத்தில் எல்லாரும் கிட்டத்தட்ட ஒரே வயது என்பதால் படப்பிடிப்புக்கு போகும் போதே ஜாலியாக இருக்கும். இயக்குநரும் எங்களுடன் கூலாக உட்கார்ந்து பேசுவார். ஆனால், வேலை என்று வந்துவிட்டால் சின்சியராக செய்து விடுவார். ரியோ இந்த படம் மூலம் இந்த இடத்திற்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் ரியோவும் இந்த படத்தில் ஸ்கிரீன் ஷேர் செய்துள்ளோம்".

 கவின்

"ரியோவின் உழைப்பு இந்த படத்தில் அதிகமாக இருக்கிறது. என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி".

 இயக்குநர் சீனு ராமசாமி,

" இந்தப் படத்தில் உள்ள கலைஞர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் எனது வாழ்த்துக்கள். இதில் நடித்த ரியோ, இயக்குநர் ஹரிஹரன் என யாருமே எனக்கு பெரிய அறிமுகம் இல்லை. தயாரிப்பாளர் அருள் நந்து மட்டுமே எனக்கு தெரியும். அவர்தான் இந்த படத்தை என்னை பார்க்க சொல்லி சொன்னார். படம் பார்த்த பின்பு படத்தின் புரோமோஷன்காக ஒரு சாட்சியாக நானும் வந்திருக்கிறேன். அவ்வளவு அருமையான படம் இது. படம் பார்த்த பின்பு எனக்கு 20 வயது குறைந்தது போல உள்ளது. இந்த படம் பார்த்த பின்பு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க ஏதாவது சொல்ல வேண்டுமென்று என்னை உந்தியது. குடும்பத்தோடு எல்லோரும் இந்த படத்தை நிச்சயம் பார்க்கலாம். சமீபத்தில்,  மனநிறைவோடு நான் பார்த்த படம் 'ஜோ'. இளைஞர்களே நம்பி படம் எடுத்த இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் நான் நன்றி சொல்கிறேன். ஒரு மனிதனை காதல் எப்படி தோற்கடிக்கிறது வாழவைக்கிறது என்பதை இந்த படம் சொல்லும். இந்த படம் என்னை பயங்கரமாக தாக்கி அழ வைத்தது. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இதில் ஒரு பாடல் பாடியுள்ளார். அவரை என் படத்தில் கூட இப்படி நான் பயன்படுத்தவில்லை. அவர் குரல் வரும் போது எல்லாம் மனம் கலங்குகிறது. படம் நல்ல திரையரங்க அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும்" என்றார்.


webdunia

 
 நடிகர் தீனா,

 " ரியா அண்ணாவின் 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு' அவருடன் எனக்குப் பழக்கம். அவர் கூப்பிடவில்லை என்றாலும் இந்த நிகழ்வுக்கு நானே வருவேன். இந்த படத்தில் அவர் எப்படி நடித்திருக்கிறார் என்பதை பார்க்க ஆர்வமாக உள்ளேன்" என்றார்.

 நடிகர் புகழ்

"படத்தில் நடித்தோமோ போனோமோ என்றில்லாமல் உங்கள் பட நிகழ்வுக்கு நீங்களே ஹோஸ்ட் செய்து கொண்டிருப்பது பெரிய விஷயம். உன்னுடைய உழைப்புக்கு நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய இடத்தை போய் சேரும்".
 ஃபைனான்சியர் அன்புச்செழியன்,

 " படத்தில் எல்லாருமே சிறப்பாக நடித்துள்ளனர். முதல் பாதி ஜாலியாகவும் இரண்டாம் பாதி எமோஷனலாகவும் போனது. '96' போல படம் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்".

 நடிகர் ஏகன்

"இந்த படத்தின் கதை கேட்டதில் இருந்தே கதையும் என் கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது. படம் உங்களுக்கும் பிடிக்கும்".

 நடிகர் அன்புதாசன்

" கடினமான உழைப்பைக் கொடுத்தால் எந்த ஒரு படமும் வெற்றி பெறும். அப்படியான உழைப்பை 'ஜோ' படக்குழுவினர் கொடுத்துள்ளனர். படதின் இயக்குநர், தயாரிப்பாளர், ஹீரோ, ஹீரோயின் எல்லோருக்கும் நன்றி. வாழ்த்துக்கள்!"

 நடிகர் கெவின்,

 "'படத்தில் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. நடிக்க முடியாமா?' என ரியோ  கேட்டார். இதற்காக தான் காத்திருக்கிறேன் என்று சொல்லி இந்த படத்தில் நடித்தேன். ரொம்பவே பிரெண்ட்லியான டீமாக தான் இருந்தது. படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி".


webdunia

 
 நடிகர் விகே,

 "இந்தப் படத்தில் நான் நடிப்பேன் என்று நினைக்கவே இல்லை. ஹரி சார் கதை சொன்னதும் எனக்கு பிடித்திருந்தது. வாய்ப்புக்கு நன்றி".

 நடிகர் மற்றும் இணை இயக்குநர் குட்டி ஆனந்த்,

"இந்தப் படத்திற்கு கோ டைரக்டராக தான் உள்ளே வந்தேன். ஆனால், அந்தப் பணியை நான் ஒழுங்காக செய்யவில்லை என்று ஆர்டிஸ்ட் ஆக்கிவிட்டார்களா என்று தெரியவில்லை. இயக்குநர் ஹரிக்கு நன்றி".

 இசையமைப்பாளர் சித்துகுமார்

"எனக்கும் இயக்குநர் ஹரிக்கும் ஒரு நல்ல நட்பு இருக்கிறது. இருந்தாலும் நாங்கள் படம் முடியும் வேளையில்தான் இன்னும் நெருக்கமானோம். ரியோ அண்ணனோடு ஷார்ட் பிலிம்ஸ் காலத்திலிருந்து பணியாற்றி வருகிறேன். என்னுடன் பணிபுரிந்த அனைவருக்கும், படக்குழுவுக்கும் நன்றி".

 நடிகை மாளவிகா

"நான் ஒரே மலையாளி. இந்தப் படத்தில் என்னை நம்பி மிக முக்கியமான வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர் ஹரி இவர்களுக்கு நன்றி. படத்தின் கதை மிகவும் பிடித்து செய்தேன். ரியோ சீனியராக இருந்தாலும் எங்களை மிகவும் நன்றாக நடத்தினார். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்".

 நடிகை பவ்யா,

 "தயாரிப்பாளர், இயக்குநர், ரியோ என எல்லாருக்குமே நன்றி. நாங்கள் அனைவரும் முழு மனதை கொடுத்து தான் இந்த படத்தில் வேலை செய்திருக்கிறோம். இந்தப் படத்தில் பணிபுரிந்த எல்லாருமே இப்போது எனக்கு பெஸ்ட் நண்பர்கள். இந்தப் படத்தில் எண்டர்டெயின்மெண்ட், ஆக்ஷன், எமோஷன், லவ் என எல்லாமே இருக்கும். ஒரு உண்மையான காதலை உணர வேண்டும் என்றால் கண்டிப்பாக 'ஜோ' படத்தை நீங்கள் பாருங்கள்".

 இயக்குநர் ஹரிஹரன்

" இந்தப் படத்தின் நிகழ்விற்கு வந்து பெரிய வார்த்தைகள் சொன்ன சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி. நான் இயக்குநராக இந்த இடத்திற்கு வருவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. 2015 வாக்கில் இந்த கதையை ரியோ அண்ணனிடம் சொன்னேன். விடிய விடிய படத்தின் கதையை கேட்டுவிட்டு நிச்சயம் இதை நான் செய்கிறோம் என்று சொன்னார். அன்றிலிருந்து இன்று வரை இந்த படத்தை தூக்கி சுமந்து கொண்டு உள்ளார். இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி".

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிப்பு மேலயும் கிரிக்கெட் மேலயும் சின்ன வயசுல இருந்து ஆசை! - நடிகராக கலக்கும் கிரிக்கெட்டர் ஹரிஷங்கர்!