சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் ஆர்யன் கானுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என சிறப்பு புலனாய்வி குழு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் அக்டோபரில் சொகுசு கப்பல் ஒன்றில் நண்பர்களுடன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்க லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இயக்குனர் சமீர் வாங்கடேவிடமும் விசாரணை நடைபெற்று வந்தது.
இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ள சிறப்பு புலனாய்வு குழு, ஆர்யன் கானுக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளது. ஆர்யன் கானிடம் இருந்து போதை பொருள் பறிமுதல் செய்யப்படாவிட்டாலும், அவர் போதை பொருள் பயன்படுத்தியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.