Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5 கோடி பார்வையாளர்களைக் கடந்த எஞ்சாய் எஞ்சாமி பாடல்!

5 கோடி பார்வையாளர்களைக் கடந்த எஞ்சாய் எஞ்சாமி பாடல்!
, புதன், 24 மார்ச் 2021 (07:47 IST)
ஏ ஆர் ரஹ்மானின் மாஜா ஸ்டுடியோ பக்கத்தில் வெளியான எஞ்சாய் எஞ்சாமி பாடல் இதுவரை 5 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை மற்றும் தயாரிப்பில் இரு வாரங்களுக்கு  எஞ்சாய் எஞ்சாமி பாடல் யு டியூபில் வெளியானது.  இந்த பாடலுக்கான வரிகளை தெருக்குரல் அறிவு எழுத தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் இணைந்து பாடி இருந்தனர். குரலில்  ஏ ஆர் ரஹ்மானின் மாஜா ஸ்டுடியோவின் இணையப்பக்கத்தில் இந்த பாடல் வெளியானது. வெளியானதில் இருந்தே மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த பாடல் திரையுலகினர் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில் இரண்டு வாரங்களில் இந்த பாடல் 5 கோடி பேருக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது. மொழியை தாண்டியும் வைரல் ஹிட்டாகியுள்ளது பாடல்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொடைக்கானலுக்கு ஜில் ஜில் ட்ரிப் அடித்த சாக்ஷி - வெகேஷன் போட்டோஸ்!