Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன் படத்துக்கு புதிய சிக்கல் – எம்.ஜி.ஆர் தலைப்பு கிடைக்குமா ?

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (11:58 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகும் படத்துக்கு எங்க வீட்டுப்பிள்ளை எனப் பெயர் வைக்கப்படவுள்ள நிலையில் அதற்கு விஜயா புரொடக்‌ஷன் நிறுவனம் தடை விதித்துள்ளது.

சிவகார்த்திகேயனை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாண்டிராஜ். மெரினாப் படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தைக் கொடுத்து அவரது திரைவாழ்க்கைக்கு அச்சாரமிட்டார். அதன் பின்னர் இருவரும் இணைந்து கேடிபில்லா கில்லாடி ரங்கா படத்தில் பணிபுரிந்தனர்.

அதன் பின் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்திருந்த நிலையில் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர். இப்போது எஸ் கே 16 எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டு இருக்கும் இந்தப்படத்துக்கு எங்க வீட்டுப் பிள்ளை என எம்.ஜி.ஆர் படத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதையடுத்து எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை உள்பட தங்கள் நிறுவனம் தயாரித்த அனைத்து படங்களின் தலைப்புகளின் உரிமை இதுவரை எந்த நிறுவனங்களுக்கும் வழங்கப்படவில்லை என உரிமைக்காப்பு கோரியுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் படத்துக்கு  எங்க வீட்டு பிள்ளை டைட்டில் வைப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாதம் தொட்டுக் கேட்டுக் கொள்கிறேன்… ராம் போன்ற இயக்குனர் தமிழ்நாட்டிற்குத் தேவை- இயக்குனர் பாலா!

தனது கனவுப் படத்தின் தயாரிப்பாளரை அறிவித்த எஸ் ஜே சூர்யா..!

பதற்றம் இல்லாமல் தூங்கினேன்… இயக்குனரின் கலைஞராக இருக்க விரும்புகிறேன் – நிமிஷா சஜயன்!

ரஜினியோடு இணைந்து ‘கூலி’ படத்தில் நடனம் ஆடுகிறாரா டி ஆர்?

வாடிவாசல் தள்ளிப் போனதின் காரணம் என்ன?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments