எனிமி படத்தின் ரன்னிங் டைம் அப்டேட்!

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (15:36 IST)
விஷால் மற்றும் ஆர்யா நடித்துள்ள எனிமி திரைப்படத்தை அண்ணாத்த படத்துக்குப் போட்டியாக தீபாவளிக்கு வெளியிடுகிறார்கள்.

விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, கருணாகரன் உள்பட பல நடித்த இந்த திரைப்படத்தின் பாடல்களுக்கு எஸ்.தமன் அவர்களும் பின்னணி இசையை சாம்.சி.எஸ் அவர்களும் அமைத்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் எஸ் வினோத்குமார் தயாரித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ளது.

இந்நிலையில், விஷாலின் எனிமி படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்பட்டது.ஆனால், எனிமி என்ற படத்திற்கு தியேட்டர்கள் போதுமான அளவு கிடைக்கவில்லை எனத் தயாரிப்பாளர் தெரிவித்துளார். இதற்கு அண்ணாத்த திரைப்படம்தான் காரணம் என அவர் காரணம் கூறினாலும், எனிமி திரைப்படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் முன்வராததே காரணம் எனவும் சொல்லப்படுகிறது.

ஆனால் இதுவரை எனிமி திரைப்படம் தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்கவில்லை. இந்நிலையில் அந்த படத்தின் ரன்னிங் டைம் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. எனிமி திரைப்படம் 2 மணிநேரம் 39 நிமிடம் ஓடுமாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments